Home

அன்புடைய நண்பர்களே வணக்கம் !

நம் தமிழ்மரபில் தோன்றிய சித்தர் பெருமக்கள் பேரருள் கொண்ட இறைவனிடம் வேண்டி,தங்கள் ஞானத்தால் கண்டறிந்த அருட் கலைகளான யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், சோதிடம், மந்திரம், சரகலை, பஞ்சபட்சி, முப்பு, காயகற்பம், வர்மம் போன்ற அரிய கலைகளை தங்களின் பாரம்பரிய வழித்தோன்றல்களான சீடர்களும், மனித குலமும் பயன் பெரும் வகையில் 'ஓலைச்சுவடி"களில் பாடல்கள் வடிவில் பல லட்சம் பாடல்களாக வடித்துள்ளனர்.

இவைகள் காலப்போக்கில் சுவடிகளில் உள்ளவைகளை படி எடுத்து பதிவு செய்யாமலும் சரியான வழிமுறைகளில் பாதுகாத்து பராமரிக்காமல் விட்டதால் அழிந்தவை ஏராளம். அனாலும் இன்றும் பலஆன்மீக மடாலயங்களிலும், பாரம்பரிய சித்த மருத்துவர்களிடமும், பரம்பரை ஜோதிடர்களிடமும், தமிழறிஞர்களிடமும், சித்தர் கலை ஆய்வாளர்களிடமும் தமிழகத்திலும், மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாநிலங்களிலும் பழமையான ஓலைச்சுவடிகளாகவும்,பல ஆண்டுகளுக்கு முன் பதிப்பித்த நூல்களும் ஏராளமானவை உள்ளன.

இவைகளில் உள்ள அரிய வாழ்வியல் தத்துவங்களையும், நோய்கள் தோன்றா நெறிமுறைகளையும், நோய்கள் தீர்க்கும் மருந்து முறை களையும், பஞ்சபூத - நவக்கிரக - பிரபஞ்ச இரகசிய விதிகளையும், அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்ற சூட்சும விளக்கங்களையும், பிறவிமுக்தி ஞானம் பெறவும்,பேரருள் இறைஞானம் அடைவதற்கும் "சித்தர் பிரபஞ்சம்" எனும் இக்குழுவில் இணைந்து மேற்கண்ட சித்தர் கலைகளில் உள்ள அரிய கருத்துக்களை பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும், கலந்தாய்வு செய்து நன்மை பெறவும்,சித்தர் பாடல்களில் உள்ள பரிபாஷை மற்றும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை கேட்டுப்பெறவும் இத் தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சிறப்பு பயிற்சிகள்

சரகலை :

(பஞ்சபூத ஆற்றலை உடலில் இயக்கும் இரகசியம்).

பஞ்ச பட்சி சாஸ்திரம்

(சூட்சம திறவுகோல் இரகசியம்).

இரசமணி

(பதரசத்தை மணியாக கட்டும் பயிற்சி).

மாந்திரீகப் பயிற்சி

(மந்திர, எந்திர, அஞ்சனம், தேவதை சித்தி, மூலிகை ப்ரயோகம், அஷ்டகர்மப்பிரயோகம்).

மாயாஜால சித்துகள் :

(அருளாளர்கள், மகான்கள் பிரயோகிக்கும் அரிய உயர்நிலைப்பயிற்சி).

வர்மக்கலை பயிற்சி :

(தற்காப்புமுறை மற்றும் மருத்துவமுறை. வர்மத்தின் அடிப்படை, வர்மப்புள்ளிகள் துல்லியமாகக்கண்டறிதல், வர்ம மசாஜ், அடங்கல் கண்டு இளக்குதல், பல வகை நோய்களை நீக்குதல்).

சித்தமருத்துவப்பயிற்சி :

(உடற்கூறு, நாடிஅறிதல், நோய்கள் அறிதல், மூலிகை, பாஷண, தாது இனங்களை கண்டறிதல், உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளில் தோன்றும் நோய்களுக்கு கைகண்ட அனுபவ மருந்துகள் நேரடி செய்முறைப்பயிர்சிகள்).

சித்தர் இராசாயண வேதியியல் பயிற்சி :

(உயர்நிலை ஜெயநீர், திராவகம், சுண்ணம், பாஷாண கட்டு, களங்கு, செந்தூரம், பஸ்பம், உலோகங்களில் கழிம்பு நீக்குதல் போன்ற அபூர்வ முறைகள்).

காயகற்பம் பயிற்சி :

(மூலிகை கற்பம், இரசாயணதாது கற்பம், உயர்நிலை முப்பு குரு கற்பம்).

வாசியோகம் :

இறை நிலையுடன் இரண்டரக்கலத்தல், (தன்னுள் இறைநிலை அடைதல்)

ஞானயோகம் :

தியான நிலையில் சமாதிநிலை அடைதல், ஆழ்மனதின் சக்தியை விழிப்படையச் செய்து அளப்பரிய சாதனைகளைச் செய்தல், அஷ்டாங்க நியமித்தில் ஒருநிலை

மூலிகை மருந்துகள் :

மூலிகை இனம் கண்டறிதல் -
1 மூலிகை குணம் அறிதல் -
2 நோய்களுக்கான மூலிகை மருந்துகள் -
3 செய்முறைப் பயிற்சி

மருத்துவ முப்பூ :

சித்த மருத்துவ முறையினில்
1) சூரண வகையினில் கலந்து வீர்யப்படுத்துதல் முப்பூ செய்முறைப் பயிற்சி
2)லேகியம், பஸ்பம், செந்தூரம் இவைகளில் கலந்து வீர்யப்படுத்தி நோய்களை விரைவாக குணப்படுத்தும் முப்பூ செய்முறைப் பயிற்சி

ஞான முத்தி யோகம் :

சித்தர்கள், முனிவர்கள், பேரருள்கொண்ட, இறைவனைக் கண்ட சித்திநிலை, நான்கு வேதங்கள், ஆறு சாஸ்த்திரம், பதினெண் புராணங்கள். இவைகள் அனைத்திலும் குறிப்பிடும், ஒரேயொரு பிரபஞ்சப் பேரொளியான இறைவனைக் காணும் சித்தர் உயர்நிலை ஞான இரகசியப் பயிற்சி.

நவ பாஷாணக் கட்டு :

சித்த மருத்துவ முறையினில் உயர்நிலைப் பயிற்சியான பாஷாணங்களைக் கட்டும் சிறப்பு - (பாஷாணக் கட்டு மருந்து)பயிற்சி

Our Blog Link

குருகுலம்