கூட்டமைப்பு

இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு, காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு
திருச்சி, தமிழ்நாடு

பதிவு எண்.124/2011அகில உலகில் ஆன்மீக நாடு என அழைக்கப்படும் நமது இந்தியத் திருநாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறைவனின் திருவருளாலும், மகத்துவம் வாய்ந்த சித்தர் பெருமக்களின் கருணையினாலும் மனித குலத்தின் உடல் நலனின் பொருட்டு அருளிய தெய்வீகத் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ முறையினை, சித்தர் வழி பாரம்பரியமாகவும், குருகுலக் கல்வியாகவும், குடும்ப வழி பாரம்பரியமாகவும் மற்றும் சித்தமருத்துவ கல்வி (பட்டப்படிப்பு) வழியாகவும் பயிற்சி பெற்று பல்லாயிரக்கணக்கான சித்த மருத்துவர்கள் நமது நாடு முழுவதும் மருத்துவ சேவை செய்து வருகின்றனர்.

மேலும் சித்த மருத்துவத்தின் உயர்நிலை ஆய்வு முறைகளான முப்பு, இரசவாதம், காயகற்பம், போன்ற அரிய கலைகளையும் தென்னிந்தியா முழுவதும் ஏராளமான ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சித்த மருத்துவத்தின் புகழை உலகறியச் செய்யவும், பாரம்பரிய சித்த மருத்துவர்களின் ஆய்வுத் திறனை மேம்பபடுத்திக்கொள்ளவும் சித்த மருத்துவம், முப்பு, காயகற்பம், போன்ற பிரிவுகளில் உள்ள அரிய இரகசிய செய்முறை நுணுக்கங்களை ஆராய்ந்து அரியவும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் விதமாக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு, காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு துவக்கப்பட்டு சுமார் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், ஆய்வாளர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதில் கடந்த இரண்டு வருடங்களில் இருபது ஆய்வுக் கருத்தரங்குள் நடத்தியுள்ளது இதில் பரம்பரையாக கையாண்டுவரும் ஏராளமான அரிய சித்த மருத்துவ அனுபவ முறைகள், முப்பு பற்றிய ஆய்வு விளக்கங்கள், காயகற்ப ஆய்வு முறைகள் மற்றும் இவைகளின் நேரடி செய்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. மேலும் இவைகள் பற்றிய ஆய்வு நூல்கள், குறிப்பேடுகள் வெளியிடப்பட்டன.

கடந்த இரண்டு வருடங்களில் நடந்த கருத்தரங்கில் உரையாடல்கள்pன் தலைப்பும் மற்றும் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவ மருந்து செய்முறைகளின் தொகுப்பு விபரம

1. மூட்டுவலி, முதுகுவலிக்கான மருத்துவ ஆய்வு விளக்கம் மற்றும் அனுபவ மருந்துகள் மற்றும் செய்முறைகள்.

2. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பாரம்பரியமாக கையாண்டு வரும் மஞ்சள் காமாலை மருந்து செய்முறை இரகசியங்கள். டாக்டர் எஸ். நாகராஜ்.

3. புhம்புக்கடி வி~ம் முறிய கைகண்ட சஞ்சீவி மூலிகை மருந்து செய்முறை இரகசியம். டாக்டர் எஸ். நாகராஜ்.

4. மூலிகைகளை உயிர் நிலை நிறுத்தி எடுக்கும் அனுபவ முறை சாபம் நீக்கும் மந்திரம், உயிர் கொடுக்கும் மந்திரம், கன்னி நூல் சூத்திரம், சத்துரு மித்துரு விரல் படாமல் மூலிகை பறிக்கும் இரகசிய விளக்கம். டாக்டர் எஸ். நாகராஜ்.

5. வர்மம், களரி, முத்திரை விளக்கங்கள் சூட்சும தியானம் செய்முறை விளக்கம்.

6. ஆண் மலடு, பெண் மலடு குழைந்தையின்மைக்கான அறிவியல் ஆய்வு விளக்கம் மற்றும் இவைகளை குணப்படுத்தும் பல தலைமுறைகளாக கையாண்டு வரும் மருந்து செய்முறை இரகசியம்.

7. இரத்த அழுத்தம் (பிளட் பிரசர்) நோயின் அறிவியல் ஆய்வு விளக்கம் மற்றும் இதனை குணப்படுத்தும் கைகண்ட அனுபவ மருந்துகள் விளக்கம்.

8. சிறுநீரக கல் (கிட்னி ஸ்டோன்) உடலில் தோன்றும் வகைகளின் அறிவியல் ஆய்வு விளக்கம் மற்றும் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேற்றும் மருந்துகள் செய்முறை விளக்கம். டாக்டர் எஸ். நாகராஜ்.

9. அனீமியா எனும் இரத்த சோகைக்கான ஆய்வு விளக்கம் மற்றும் இதனை குணப்படுத்தும் மருந்துகள் செய்முறை விளக்கம்.

10. தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பற்றிய ஆய்வு விளக்கம் இதனை குணப்படுத்தும் பல தலைமுறைகளாக கையாண்டு வரும் அறிய மருந்து முறைகள் விளக்கம்.

11. ஆஸ்துமா நோயிக்கான உடற்கூறு விளக்கங்கள் நோயின் தன்மை இதற்கான அனுபவ மருந்துகள் விளக்கம்.

12. மூக்கில் தோன்றும் பீனிச கழலை (சைனஸ் கிளாண்ட்ஸ்) வீக்கத்தினை மிக எளிய முறையில் குணப்படுத்தும் அற்புத தைல முறை விளக்கம். மருத்துவர் எம். கணேசன் ஐயா அவர்கள் அனுபவ முறை.

13. பெண்களின் நோய்களும் சிறப்பான மருந்துகளும் என்ற தலைப்பில் சித்த மருத்துவர் எஸ். அழகுஇளமாறன் அவர்களின் 45 வருட அனுபவ இரகசிய மருந்துகள் விளக்கம்.

14. பாரம்பரிய வி~ வைத்திய முறைகள் என்ற தலைப்பில் பாம்பு கடி வி~ம், தேள் கடி வி~ம், நாய் கடி வி~ம் போன்ற வகைகளுக்கு பரம்பரை வைத்தியர்கள் கையாண்டு வரும் இரகசிய முறை டாக்டர் எஸ். நாகராஜ்.

15. வர்ம ஆசான் வி.பிச்சைமணி அய்யா அவர்களின் அ~;ட கர்மம், அ~;ட யோகம், அ~;டமா சித்து இவைகளின் சூட்சும விளக்கங்கள் அடிப்படை இரகசியங்கள்.

16. னுச.மு. செல்வராஜ் டீ.ளு.ஆ.ளு.இ N.னு.இ அவர்களின் ஆய்வுக் கூட பரிசோதனை முறைகள் என்ற தலைப்பில் நவீன முறையில் நோய்களை கணிக்கும் முறைகளின் விளக்கம்.

17. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாற்பது வகையான நோய்களும் (தோ~ங்கள்) இவைகளை கண்டறியும் குறி குணங்கள், வராமல் தடுக்கம் வழி முறைகள் இதற்கான கைகண்ட மருந்து செய்முறை விளக்கம்.

18. சித்த மருத்துவர் டீ.சிவசங்கர் அவர்களின் முடக்கு வாதம், கனு சூலை (ருமாடீசம், ஆர்த்தரடீ~;) என்ற நோய்கள் தோன்றும் காரணங்கள் இதன் குறி குணங்கள் மற்றும் இதனை தீர்க்கும் கைகண்ட அனுபவ மருந்துகள் விளக்கம்.

19. தீராத கர்ம வினை நோய்களை தீர்க்கும் மந்திர பூர்வாங்கமான நிவர்த்தி முறை விளக்கம்.

20. பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமன் (கொழுப்பு-தைராய்டு) இது தோன்றும் ஒன்பது வகையான காரணங்கள் இவைகளை குணப்படுத்தும் மருந்து முறைகள் விளக்கங்கள்.

21. சித்த மருத்துவர் ஸ்ரீ. இரா.து.சிவஜோதி சுவாமிகளின் அனைத்து உடல் வலிகளுக்கு காரணமான நு.ளு.சு அதிகரித்தலை குணப்படுத்தும் உடற்கூறு விளக்கங்கள் மற்றும் அனுபவ மருந்துகள் செய்முறை விளக்கம்.

22. சித்த மருத்துவ முப்பு ஆய்வாளர் திரு. ஏ. தங்கவேல் அவர்களின் முப்பு காயகற்பம் என்ற தலைப்பில் தனது பல்லாண்டுகள் அனுபவ ஆய்வு விளக்கங்கள் மற்றும் எளிய கற்ப முப்பு செய்முறை விளக்கம்.

23. னுச. வு.ரகு ஆ.யு.இ சு.N.ஆ.P.இ னு.லு.N.ளு.இ அவர்களின் அனுபவ நாடி பயிற்சி விளக்கம் (தொடர் வகுப்புகள்).

24. னுச. ஊ.மு. வாசுதேவன் சு.ஐ.ஆ.P. அவர்களின் சோரியாஸிஸ் நோய்க்கான உடற்கூறு விளக்கம் அனுபவ மருந்துகள் செய்முறை விளக்கம், சிதம்பர இரகசியம் என்ற தலைப்பில் சித்தர்களின் மறை பொருள் இரகசிய விளக்கம் மற்றும் வள்ளல் பெருமானின் சாகாக் கலை விளக்கம். திருவருட்பாவிலுள்ள சூட்சம விளக்கங்கள்.

25. சித்த மருத்துவர் பி. கலியமூர்த்தி அவர்களின் சுவேத பற்பம், தீப்புண் ஆற எண்ணை வாய்வு வீக்கம் வடிய தைல முறைகள்.

மருந்துகள் நேரடி செய்முறைப் பயிற்சியில் செய்து காண்பித்த மருந்துகள்1. இஞ்சி சூரணம் உடனடி செய்முறை.

2. குங்கிலிய கழிம்பு.

3. கட்டி, கழலை, மூலத்தின் வீக்கம் நீங்க கழிம்பு செய்முறை.

4. கீட்னி ஸ்டோன், சதை அடைப்பு நீங்க பஸ்பம் உடனடி செய்முறை.

5. தோல் நோய் தீர கழிம்பு செய்முறை.

6. வெள்ளை வெட்டை தீர சூரணம் செய்முறை.

7. மூட்டு வலி, வாத தைலம் செய்முறை.

8. உடல் உ~;ணம், மேக நோய் நீங்க கற்றாலை ஜாம் செய்முறை.

9. மூலக் குடார தைலம் செய்முறை.

10. நேர்வாள பேதி மருந்து உடனடி செய்முறை.

11. குடிகார்களின் கை, கால் வீக்கம் வடிய தைலம் மற்றும் பஸ்பம் செய்முறை.

12. மேக வெட்டைப் பிடிப்பு நீங்க லீங்க செந்தூரம் செய்முறை.

13. பாதரசத்தை இரசமணியாகக் கட்டும் நேரடி செய்முறை பயிற்சி விளக்கம் மற்றும் ஏராளமான மருந்துகள் செய்து காட்டப்பட்டன.

ஆய்வு நூல்கள் மற்றும் கையேடுகள் அறிமுகம் மற்றும் வெளியிடப்பட்ட விபரம்1. காயகற்ப முப்பு செய்முறை மற்றும் இரசமணி செய்முறை விளக்க நூல்

2. பொக்கி~ம் - பாகம்-2 இரசவாத முறைகள் செய்முறை விளக்கப் படங்களுடன் தொகுப்பு நூல்.

3. சித்த மருத்துவத்தில் சிடுகா மருந்துகள் எனும் அனுபவ மருந்துகள் செய்முறை விளக்கங்கள்.

4. பூநீர் அறிவியல் ஆய்வு தமிழ் விளக்க கையேடு.

5. சித்தர்களின் இரசவாதத்தின் அடிப்படைகள் ஆய்வு விளக்க கையேடு.

6. அமுதசுரபி என்னும் அண்டக்கல் (கற்ப முப்பு குரு நூல்). நம் நாட்டு சித்தர்களும் வெளிநாட்டு ஞானிகளின் கற்ப முப்பு ஆய்வு விளக்கங்கள்.

7. கருணாமிர்த சாகரம் வைத்திய ரத்தினம் ஜட்ஜ் பலராமையாவின் குருநாதர் மகான். கருணாகர சுவாமிகளின் கையேட்டுப் பிரதிகளின் அபூர்வ தொகுப்பு நூல்.

8. மேலை நாட்டு சித்தர்களின் காயகற்ப முப்பு இரகசியங்கள். மேலை நாட்டு முப்பு ஆய்வாளர்களான பாராசெல்சஸ், பேசில்வாலன்டைன், போன்ற ஏராளமான ஞானிகளின் ஆய்வு விளக்க தமிழ் தொகுப்பு நூல்.

மேற்கண்ட ஆய்வுகள் மற்றும் விளக்கங்களுடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் எமது கூட்டமைப்பின் கருத்தரங்குள் திருச்சியில் நடைபெற்று வருகின்றது. சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்கள் எமது கூட்டமைப்பில் இணைந்து பயன்பெறலாம்.

நன்றி !

இமயகிரி சித்தர்…

குருகுலம்